எங்களைப் பற்றி

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆங்கில வழியில் கல்வி போதிக்கும் சுயநிதிப் பள்ளிகளாகும். ஆரம்பகாலத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சென்னை மற்றும் மதுரை பல்கலைக் கழங்களின் இணைப்பினைப் பெற்றிருந்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமது தனித்தன்மையுடன் இவ்விரு பல்கலைக்கழகங்களுடன் இணைப்புபெற்றிருப்பினும், நிதி சார்ந்தும், செயல்பாடுகள் சார்ந்தும் தன்னாட்சியுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன. நிர்வாக வசதிக்காக இப்பள்ளிகள் 1978ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. அத்தருணத்தில் சுமார் 20 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே செயல்பட்டுவந்தன. இப்பள்ளிகள் மெட்ரிகுலேசன் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் விதித் தொகுப்பு 1978இன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், மெட்ரிகுலேசன் பள்ளிகளை சீரிய முறையில் கண்காணிக்க 2001ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது 4268 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 39,18,221 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் 15 மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளன. மேலும், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநில முதன்மைத் தொடர்பு அலுவலராக உள்ளார்.

மாண்புமிகு கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்கள்

திரு பிரதீப் யாதவ்,இஆப, தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர்

முனைவர்ச. கண்ணப்பன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர்

முனைவர்சி. உஷாராணி ,இணை இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்